February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டம் வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் கவுர்

2021 ஆண்டுக்கான ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ஹர்னாஸ் கவுர் சாந்து வென்றுள்ளார்.

இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் 70 ஆவது ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில் 80 நாடுகளைச் சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்ற இளம்பெண் ஹர்னாஸ் கவுர் போட்டியில் வென்று ‘மிஸ் யுனிவர்ஸ்’ பட்டத்தை பெற்றுள்ளார்.

ஹர்னாஸ் கவுருக்கு முன்னாள் மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவின் ஆண்ட்ரியா பட்டம் சூட்டினார்.

முன்னதாக லாரா தத்தா 2000 ஆம் ஆண்டில் குறித்தப் பட்டதை வென்றிருந்த நிலையில், 20ஆண்டுக்குப் பிறகு இந்தியாவை சேர்ந்த ஒருவர் அந்தப் பட்டதை பெறுவதே இதுவே முதற்தடவையாகும்.

https://twitter.com/MissUniverse/status/1470227063789563907?s=20