கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த செய்தியை பகிர்ந்துக்கொண்ட அமைச்சர் “கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தங்களை விரைவாக கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ளும்படி” கேட்டுக்கொண்டார்.
வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் ஸ்மிருதி இரானி பீகார் தேர்தலுக்காக மத்திய அரசின் சார்பில் தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்த வேளையே வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்போது இந்தியாவில் குறைந்து வந்தாலும் மத்திய அமைச்சர்கள், மாநில ஆளுநர் போன்றோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுக்கான், கர்நாடக முதல்வர் பி.எஸ். எடியூரப்பா உள்ளிட்டோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததமை குறிப்பிடத்தக்கது.