February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்: ஒரே நாளில் பிரசவம்!

இந்தியாவில் கேரளா மாநிலத்தில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்த இரட்டை சகோதிகள் இருவருக்கும் அவர்களின் விருப்பப்படி,  மாப்பிள்ளைகள் பார்த்து, 2020 டிசம்பர் 11 ஆம் திகதி, ஒரே மேடையில் பெற்றோரினால் திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன்பின்னர் ஒரே காலப்பகுதியில் கர்ப்பமான இருவரும் தாங்கள் பிறந்த வைத்தியசாலையிலேயே குழந்தைகளை பெற்று கொள்ளவிரும்பினர்.

இந்நிலையில் கடந்த 7 ஆம் திகதி இருவருக்கும் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.