ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த வீரர்களின் உடலை எடுத்து செல்லும் போது இரண்டு அம்புலன்ஸ்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சேதமடைந்த அம்புலன்ஸில் இருந்த உடல் வேறு ஒரு அம்புலன்ஸுக்கு மாற்றப்பட்டு பின்னர் எடுத்துச் செல்லப்பட்டது.
வெலிங்டன் மைதானத்திலிருந்து கோவை சூலூர் விமான நிலையத்திற்கு உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்களை கொண்டு சென்றபோது ஒரு அம்புலன்ஸ் மற்றொரு அம்புலன்ஸின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மேட்டுப்பாளையம் அருகே வந்தபோது போக்குவரத்து தடைப்பட்டதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.அப்போது அடுத்தடுத்து அம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளாகியது.
உடனடியாக அதிலிருந்த இராணுவ வீரரின் உடலை கூடுதலாகக் கொண்டுவரப்பட்ட அம்புலன்ஸில் ஏற்றி சென்றனர்.
அதேபோல் சற்று முன்னதாக ஹெலிகொப்டர் விபத்தில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் சென்ற பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கியது
வெலிங்டனில் இருந்து 13 பேரின் உடலை எடுத்துச்செல்லும் அம்புலன்ஸிற்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற காவல் வாகனம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப் பாதையில் விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று காவலர்கள் காயமடைந்ததாக கூறப்படுகிறது .
உயிரிழந்த 13 பேரின் உடல்களை வெலிங்டனில் இருந்து சூலூருக்கு அமரர் ஊர்தியில் எடுத்துச் செல்லும்போது பாதுகாப்புக்கு சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது.
நீலகிரி அருகே பர்லியார் மலைப்பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்தில் பொலிஸார் சிலர் காயமடைந்தனர்.