January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹெலி. விபத்தில் இறந்தவர்களுக்கு தமிழக முதல்வர் அஞ்சலி

குன்னூர் இராணுவ ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேரின் உடல்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

வெலிங்டன் விமானப்படை மைதானத்தில், முதல்வர் கறுப்புத் துண்டு அணிந்து மரியாதை செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள இராணுவ பயிற்சி கல்லூரியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவரது மனைவி மற்றும் உயர் அதிகாரிகள் உள்பட 14 பேர் ஹெலிகொப்டரில் புறப்பட்டு சென்றனர்.

குன்னுார் மலைப்பகுதியில் காட்டேரி என்ற பகுதியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில்  தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்   முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உட்ள்பட 13 வீரர்களின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி வீரவணக்கம் செய்தார்.

கருப்புத் துண்டு அணிந்து வந்து ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடங்கள் மௌனஅஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து, புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் விபத்தில் பலியான இராணுவ வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.