April 30, 2025 12:48:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய முப்படையின் தலைமைத் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் விபத்து!

இந்திய முப்படையின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்டவர்கள் பயணித்த இராணுவ ஹெலிகொப்டர் விழுந்து நொருங்கியுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இன்று காலை இந்த இராணுவ ஹெலிகொப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹெலிகொப்டரில் முப்படையின் தலைமைத் தளபதி உட்பட 14 பேர் பயணித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

தலைமைத் தளபதி பிபின் ராவத்தின் உடல் நிலைமை குறித்த தகவல்கள் இதுவரையில் வெளியாகவில்லை.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் நடத்தப்படும் என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.