November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய போர்க்கப்பல்களின் பாதுகாப்பு திறனை அதிகரிக்கும் குறுகிய தூர ஏவுகணை சோதனை வெற்றி

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குறுகிய தூர ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.இந்த ஏவுகணை வான் இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது என கூறப்படுகிறது.

இந்த ஏவுகணை பரிசோதனை ஒடிசா மாநில கடற்கரையில் உள்ள பரிசோதனை மையத்தில் இருந்து நடத்தப்பட்டுள்ளது.

வானில் குறுகிய தூரத்தில் இருக்கும் எலக்ட்ரோனிக் இலக்கை தாக்கும் வகையில் இந்த ஏவுகணை செங்குத்தான ஏவுதளத்திலிருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணையின் அனைத்து பாகங்களும் அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளும் திறம்பட செயல்பட்டதாக இந்த பரிசோதனையில் ஈடுபட்ட டி.ஆர்.டி.ஓ மற்றும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அடுத்தகட்டமாக ஏவுகணை போர்க்கப்பலில் இருந்து ஏவி பரிசோதிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஏவுகணை, இந்திய போர்க் கப்பல்களின் பாதுகாப்பு திறனை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

வானில் குறிப்பிட்ட ஒரு தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என கூறப்படுகிறது.

இந்த ஏவுகணை பரிசோதனை வெற்றி பெற்றதையடுத்து, இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விஞ்ஞானிகளுக்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்து உள்ளார்.