November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியா பயணம்: 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ரஷ்ய அதிபரின் இந்த பயணத்தின்போது இரு நாடுகளுக்கிடையில் முக்கியமாக 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக ரஷ்ய அதிபரின் உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய அதிபர் டிசம்பர் 6ஆம் திகதி, இந்தியா, ரஷ்யா இடையேயான 21ஆவது உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வருகிறார்.

2019ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே நடைபெறும் முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்த 21ஆவது உச்சிமநாட்டில் சர்வதேச பிரச்சினைகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத் துறைகள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் பயணத்தின் போது இருநாட்டு வெளியுறவுத்துறை,பாதுகாப்பு துறை அமைச்சர்கள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெறும்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன், ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கேய் ஷோய்கு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் ஆகியோர் சந்தித்து பாதுகாப்பு விடயங்கள் குறித்து பேசவுள்ளனர்.