May 24, 2025 10:31:37

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்து விட்டார்; மருத்துவமனை அறிக்கை

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட‌ நடிகர் கமல்ஹாசன் ஸ்ரீராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவர் தற்போது முழுமையாக குணமடைந்து விட்டதாக மருத்துவமனை‌ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 3 ஆம் திகதி வரை கமல்ஹாசன் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.டிசம்பர் 4 ஆம் திகதி முதல் தனது பணிகளை கமல்ஹாசன் தொடங்கலாம் என கூறப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்கா சென்று திரும்பிய பின்னர் தனக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் கமலின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கமல்ஹாசன் முழுமையாக குணமடைந்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.