பிக்பாஸ் சீசன் 1 முதல், தற்போது 5வது சீசன் வரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு பதிலாக நடிகை ரம்யாகிருஷ்ணன் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின்னர் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 22 ஆம் திகதி பதிவிட்டிருந்தார்.
சனி ,ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் இன்றைய பிக்பாஸ் ப்ரமோவில் நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் இருந்து பேசிய காணொளி வெளியாகி இருக்கிறது.
அதில் ,”வணக்கம் மக்களை நோக்கி மருத்துவமனை டிவியில் இருந்து பேசுவது உங்களுடன் நான். தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டுகளிக்க ஒரு தோழி எனக்கு உதவி செய்வார்” என அறிவித்திருக்கிறார்.
அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் என கமல்ஹாசன் ரம்யா கிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
அப்போது பாகுபலி படத்தின் பின்னணி இசையுடன் கெத்தாக மேடையில் நடைபோட்டு வந்தார் ரம்யா கிருஷ்ணன்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 இன்றைய நிகழ்வை தொகுத்து வழங்கிய நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
இதனை சமூக வலைதளங்களில் பிக்பாஸ் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ள கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
#BiggBossTamil இல் இன்று.. #Day55 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – திங்கள் முதல் வெள்ளி இரவு 10 மணிக்கு, சனி மற்றும் ஞாயிறு இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason5 #BiggBossTamil5 #பிக்பாஸ் #nipponpaintindia #PreethiPowerDuo #VijayTelevision pic.twitter.com/F18FMYaMDo
— Vijay Television (@vijaytelevision) November 27, 2021