January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குஜராத் மாநிலம் அம்பானி வீட்டில் நடப்படும் பழமை வாய்ந்த இரு ஒலிவ் மரங்கள்

இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள பங்களாவை அலங்கரிக்க உள்ளது பழமை வாய்ந்த இந்த ஒலிவ் மரங்கள் .

சுமார் 180 ஆண்டுகள் பழமையான இந்த இரண்டு ஒலிவ் மரங்களும் ஆந்திர மாநிலத்திலிருந்து ,குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு நடப்பட உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பெயினிலிருந்து இந்த 180 ஆண்டுகள் பழமையான இரு ஒலிவ் மரங்கள் ஆந்திராவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

தற்போது இந்த இரு ஒலிவ் மரங்களும் டிராக் ஒன்றில் ஏற்றப்பட்டு 5 நாள் பயணமாக குஜராத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது .

இந்த ஒலிவ் மரங்கள் ஒவ்வொன்றும் 2 டன் எடையுள்ளவை எனக் கூறப்படுகிறது.

டிராக்கில் இந்த மரங்களை ஏற்றுவதற்காக ஹைட்ராலிக் க்ரேன்கள் மற்றும் 25 பேர் கொண்ட குழு ஈடுபட்டது.

ஆந்திராவில் இருந்து குஜராத்திற்கு 5 நாட்கள் பயணமாக செல்லும் இந்த ட்ரக் வண்டி, மரங்களின் அதிக எடை காரணமாக 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் பயணிக்கும் என கூறப்படுகிறது.

பொதுவாகவே புனிதமாக கருதப்படும் ஒலிவ் மரங்கள் நல்ல வளங்களை தரும் என நம்பப்படுகிறது.

இந்த மரம் சுமார் 1000 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்டது என கூறப்படுகிறது .

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் முகேஷ் அம்பானி ஒரு மிருகக்காட்சிசாலையை உருவாக்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அதேபோல் இயற்கை வனப்புடைய ஒரு முழு சுற்றுச்சூழல் அமைப்பையும் அவர் உருவாக்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த இயற்கை சுற்றுச்சூழலை மேலும் அழகாக்க பல அரிய வகை இனங்களைச் சேர்ந்த மரங்களை அவர் சேகரித்து வருகிறார்.

‍இந்த 180 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒலிவ் மரங்களும் குஜராத்தின் ஜாம்நகர் பங்களா பகுதியில் நடப்பட உள்ளது.

இந்த இரு ஒலிவ் மரங்களையும் குஜராத் கொண்டு செல்வதற்காக முகேஷ் அம்பானி சுமார் 85 லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.