இந்தியா – மியான்மர் எல்லையில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவில் 6.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்தின் சிட்டகாங் நகரில் இருந்து 174 கிலோமீற்றர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் சிட்டகாங் மட்டுமின்றி இந்தியாவின் மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் ஆகிய மாநிலங்களிலும் கடும் அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதன்போது குறித்தப் பகுதிகளில் 30 செக்கன்கள் அதிர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.