இந்திய விமானப்படைக்கு 2,236 கோடி ரூபாய் செலவில் தகவல் தொடர்பு சாதனங்களை வாங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த தளவாடங்கள் மற்றும் சாதனங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் என கூறப்படுகிறது.
விமானப்படையின் இந்த திட்டத்துக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதில் முக்கியமாக ஜிசாட்-7சி செயற்கைக்கோள் மற்றும் மென்பொருள் மூலம் வரையறுக்கப்பட்ட ரேடியோக்களின் நிகழ்நேர இணைப்பு மையங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன.
அதேபோன்று, 5 ஆயிரம் கோடியில் 7.5 இலட்சம் ஏ.கே.203 நவீன துப்பாக்கிகள் தயாரிக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
அந்தவகையில், ஜிசாட்-7சி செயற்கைக்கோளை இந்தியாவிலேயே தயாரித்து, விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
ஜிசாட்-7சி செயற்கைக்கோள் மூலம் இந்திய பாதுகாப்பு படையினரின் தகவல் தொடர்பு சேவை மேம்படும் என பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.