January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இலங்கைத் தமிழர் மறுவாழ்வுப் பணிகளுக்கு 317 கோடி ரூபாய் ஒதுக்கீடு’- அமைச்சர் செஞ்சி மஸ்தான்

இலங்கைத் தமிழர் மறுவாழ்வுப் பணிகளுக்காக 317 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த புழல் காவாங்கரையில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இதில் கலந்துகொண்டு, நலத்திட்ட உதவிகளை வழங்கி வைத்துள்ளார்.

இந்நிகழ்வில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வாழும் பல்வேறு பயனாளர்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன.

தமிழகம் முழுவதுமுள்ள 106 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.