June 17, 2025 14:59:54

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நடிகர் கமல் ஹாசனின் உடல்நிலை சீராகவுள்ளது’: மருத்துவமனை அறிக்கை

file photo

நடிகர் கமல் ஹாசனின் உடல்நிலை சீராக இருப்பதாக ஸ்ரீ ராமசந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவருக்கு கடந்த சில நாட்களாக கொரோனா அறிகுறிகள் வெளிப்பட்டதை அடுத்து, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பரிசோதனையில் நடிகர் கமலுக்கு கெரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கமல் ஹாசனுக்கு கெரோனா தொற்றுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் கமல் ஹாசனைத் தொடர்புகொண்டு, நலம் விசாரித்துள்ளார்.