January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“இந்தியா- அமெரிக்கா ஒன்றிணைந்து செயற்படவேண்டிய தருணம் இது” – பொம்பியோ

சீனாவிடமிருந்து எழக்கூடிய பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கு எதிரான அச்சுறுத்தல்களை இந்தியா- அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்ளவேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் இந்தியா – அமெரிக்கா தெரிவித்துள்ளார்.

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகின்ற நிலையில் இராஜாங்க செயலாளர் மைக் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பெர்க்குடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூட்டாக டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

“எங்கள் இரு ஜனநாயக நாடுகளும் தமது மக்களையும் சுதந்திர உலகத்தினையும் பாதுகாப்பதற்கு இணைய வேண்டும். இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவை வலுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நம்மைப் போன்ற இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் நெருக்கமாக வளர இன்று ஒரு புதிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. நிச்சயமாக இன்னும் பல நடவடிக்கைகள் அமுல்படுத்தப்படவுள்ளன.

இன்று நாம் விவாதிக்க நிறைய உள்ளன, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கும் துணை நிற்கும் என மைக்பொம்பியோ கூறினார்.

5 முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்து
இந்தியா – அமெரிக்கா இடையே அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு உள்பட 5 முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவும் மிகவும் இரகசியமான செய்மதி மற்றும் வரைபட தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கான உடன்படிக்கை, புவிசார் ஒத்துழைப்பு குறித்த அடிப்படை தகவல்கள் மற்றும் ஒத்துழைப்பு ஆகிய உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டன.

இரு நாடுகளுக்கு இடையே இராணுவ ஒப்பந்தங்கள், இராணுவ உபகரணங்கள் வழங்குதல், இரு நாடுகளும் இணைந்து இராணுவ, கடல் பரப்பு, வான் பரப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இணைந்து செயல்படுதல் மற்றும் அது தொடர்பான தகவல்களை பகிர்தல் என பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.