July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நடிகர் கமல்ஹாசனிடம் நலம் விசாரித்த ரஜினிகாந்த்

File Photo

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்று திரும்பிய தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன்.

இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமல்ஹாசன் சிகிச்சை பெற்று வருகிறார்.

கமல்ஹாசனின் உடல்நிலை சீராக உள்ளதாக ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் அவரிடம் தொலைபேசி வாயிலாக விசாரித்துள்ளார்.

விரைவில் குணமடைந்து வீடு திரும்புமாறு ரஜினிகாந்த் கமல்ஹாசனை வாழ்த்தி உள்ளார்.

முன்னதாக தமிழக முதல்வர் ஸ்டாலின், சீமான் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்களும் கமல்ஹாசன் விரைந்து குணமடைய வேண்டி வாழ்த்தியுள்ளனர்.