July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் மீண்டும் ஒரு தாஜ்மஹால்

உலக அதிசயங்களில் ஒன்றுதான் இந்தியாவில் இருக்கும் தாஜ்மஹால்.

இன்றுவரை காதலர்கள் அந்த தாஜ்மஹாலை கொண்டாடி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது தனது காதல் மனைவிக்காக ஒரு தாஜ்மஹாலை கட்டியிருக்கிறார் கணவர் ஒருவர்.

தனது காதல் மனைவிக்காக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய அபரிமிதமான காதலை வெளிப்படுத்தும் விதமாக தாஜ்மஹால் போன்ற ஒரு வீட்டைக் கட்டிக் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தி இருக்கிறார் .

உத்தரப் பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் இருக்கும் உலக அதியங்களில் ஒன்றான காதல் சின்னம், தாஜ்மஹாலை முகலாய பேரரசர் ஷாஜகான் தன்னுடைய காதல் மனைவியான மும்தாஜின் நினைவாக எழுப்பினார்.

தற்போது மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இருக்கும் ஆனந்த் சோக்சே என்பவர் தன்னுடைய மனைவி மஞ்சுஷா மீதான காதலை வெளிப்படுத்தும் விதமாக தாஜ்மஹால் வடிவிலான வீட்டை கட்டிக் கொடுத்துள்ளார்.

வியக்க வைக்கும் கொள்ளை அழகில் அச்சு அசலாக ஆக்ராவில் இருக்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை போன்றே பளிச்சிடும் வண்ணத்தில் இந்த நினைவுச் சின்னமான தாஜ்மஹால் வீடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மத்திய பிரதேசம் மாநிலம் புர்ஹான்பூரில் கல்வி நிறுவனத்தை நடத்தி வருபவர் தான் ஆனந்த் சோக்சே.தன்னுடைய மனைவிக்கு காதல் பரிசாக தாஜ்மஹால் போன்ற வீட்டை கட்டி பரிசளிக்க முடிவு செய்துள்ளார் ஆனந்த் சோக்சே .

இந்தூர், மேற்கு வங்க கட்டடக் கலை நிபுணர்களின் ஆலோசனையுடன், இந்த தாஜ்மஹால் வீட்டை கட்டி முடித்துள்ளார் ஆனந்த் சோக்சே.

சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த தாஜ்மஹால் வீட்டின் கட்டுமான பணி தற்போது நிறைவடைந்திருக்கிறது

இந்த பிரம்மாண்டமான தாஜ்மஹால் வீட்டில், நான்கு படுக்கையறைகள், நூலகம் ,தியான அறை, சமையலறை மற்றும் பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் இருப்பதைப் போன்றே இந்த வீட்டின் மேல் புறத்தில் வட்ட வடிவில் 29 அடியில் டூம் கட்டியுள்ளனர்.

அச்சு அசலாக தாஜ்மஹாலை போன்ற கோபுரங்கள் ,நிலைத் தூண்கள், பளிங்கு கற்கள், வண்ண விளக்குகள், ராஜஸ்தானின் மார்பிள் கற்களைக் கொண்டு அமைக்கப்பட்ட தரை தளம் என மிளிர்கிறது அந்த வீட்டின் கட்டிடக்கலை.

இந்தியாவில் தன் மனைவி மீதான காதலை வெளிப்படுத்த மீண்டும் ஒரு தாஜ்மஹாலை கட்டி பரிசளித்திருக்கிறார் ஆனந்த் சோக்சே.

தற்போது சமூக வலைத்தளங்களில் இது வைரலாகி வருகிறது.

This slideshow requires JavaScript.