நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
அமெரிக்கா சென்று வந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்ற உறுதியாகி உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்ததாகவும் பரிசோதனை செய்ததில் கொவிட் தொற்று உறுதியானதாக கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்னமும் நோய் பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கமல்ஹாசன் டுவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.