July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க்கப்பல் கடற்படையில் சேர்ப்பு

உள்நாட்டிலேயே அதிநவீன கருவிகளுடன் தயாரிக்கப்பட்ட அதிநவீன போர் கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.

7,400 டொன் எடை கொண்டதாக ‘விசாகப்பட்டினம்’ என்ற பெயரில் இந்தக் கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாதுகாப்புத் துறை 15பி என்ற பெயரில் இதனை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதில் முதல் அதிநவீன போர்க் கப்பலான ‘ஐஎன்எஸ் விசாகப்பட்டினம்’ மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நடத்தப்பட்ட பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

உள்நாட்டு தயாரிப்பான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் போர்க் கப்பலில் ஏராளமான அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும்‌ ராக்கெட்டுகள், ஏராளமான ஏவுகணைகள், ரேடார்கள், அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் , போர் சூழ்நிலையை சமாளிக்க தேவையான அனைத்தும் இந்த கப்பலில் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் அதிநவீன துப்பாக்கிகள், சூப்பர்சானிக் சென்சார்கள் , மின்னணு போர்க் கருவிகள் என பல்வேறு சிறப்பு அம்சங்களையும் இந்தக் கப்பல் கொண்டுள்ளது.