பொது இடங்களில் தடுப்பூசி போட்டவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என தமிழக அரசு பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழக அரசு கொவிட் தொற்றுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகளையும் திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இந்த நிலையில் தற்போது பாடசாலை, திரையரங்கு, சிறப்பு அங்காடி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு தமிழக பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது.
வாரத்திற்கு இரண்டு நாட்கள் தடுப்பூசி முகாம்களை நடைமுறைப்படுத்துவதோடு, தற்போது வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் வாரந்தோறும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அதிகமான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.