
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வந்தபோது,சிறையிலுள்ள ரவிச்சந்திரன் மற்றும் அவரது தாய் தரப்பில் ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்கிட வேண்டும் என கோரிக்கை மனு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மதுரை சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .
இதனை அடுத்து மதுரை மத்திய சிறையில் உள்ள ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோலுக்கான சிறைத்துறை உத்தரவை வழங்கியுள்ளது.
வெளியே வரும் ரவிச்சந்திரனுக்கு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீதிமன்ற உத்தரவு மற்றும் முதல்வரிடம் கோரிக்கை மனு வைத்தது உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் ரவிச்சந்திரனுக்கு உடனடியாக 30 நாள் விடுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விடுப்பில் இருக்கும் காலத்தில், சமூக வலைத்தளங்களில் பதிவுகளை இடக்கூடாது எனவும், ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கவும் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.