இந்திய தலைநகரான டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு காரணமாக பாடசாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக மோசமான காற்றின் தரம் கொண்ட நகரம் டெல்லி டெல்லி என ஸ்விட்சர்லாந்தின் ‘ஐ.க்யூ ஏர்’ காலநிலை குழு மதிப்பீடு அறிக்கை வெளியிட்டிருந்தது.
மிகவும் மோசமான காற்றின் தரத்தைக் கொண்ட முதல் 10 உலக நகரங்களில் 3 இந்தியாவில் உள்ளது அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லியில் காற்று மாசை குறைக்கும் வகையில் உடனடி நடவடிக்கை தேவை என உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து டெல்லியில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.
பாடசாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்தும், அலுவலக ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் டெல்லியில் அடுத்த ஒரு வார காலத்திற்கு எவ்வித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது எனவும் அம்மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.