January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவை வந்தடைந்தார் மைக் பொம்பியோ; இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை

இந்தியா-அமெரிக்கா இடையிலான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

அமெரிக்கா-இந்தியா இடையேயான உறவு மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இரு நாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை டெல்லியில் நடைபெறுகிறது.

இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் மார்க் எஸ்பர் ஆகியோர் டெல்லியை வந்தடைந்துள்ளனர்.

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருடன் அமெரிக்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது, பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தகவல் பகிர்வு, ராணுவ தொடர்புகள் மற்றும் பாதுகாப்பு வர்த்தகம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இந்திய பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இன்று மாலை இலங்கைக்கு பயணமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.