இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் தனது குடும்பத்துடன் பயணித்தபோது தீவிரவாதிகள் பதுங்கியிருந்து கண்ணிவெடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் இராணுவ அதிகாரி கர்னல் திரிபாதி, அவருடைய மனைவி, மகன் மற்றும் 4 வீரர்கள் உட்பட 7 பேர் பலியாகியுள்ளனர்.
மணிப்பூரில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
மணிப்பூர் மியான்மர் எல்லையில் சூராசந்த்பூர் மாவட்டத்தில் காலை 10 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
மணிப்பூரில் அண்மைக் காலத்தில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. கர்னல் திரிபாதி, அவரது மனைவி மற்றும் மகன் அவர்களுடன் பாதுகாப்புக்குச் சென்ற அசாம் ரைஃபில்ஸ் படை வீரர்கள் என 7 பேருமே இந்தத் தாக்குதலில் படுகொலையாகினர்.
இந்தச் சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.