July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கேரளாவை அச்சுறுத்தும் புதிய வகை ‘நோரோ’ வைரஸ்

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் நோரோ வைரஸ் (Noro virus) என்ற தொற்றுப் பரவி வருவதாக அந்த மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் அறிவித்துள்ளார்.

இந்த நோரோ வைரஸ் தொற்று பரவி வருவதால் மக்களை விழிப்புணர்வுடன் இருக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நோரோ வைரஸ் குடலில் நோயை ஏற்படுத்தக் கூடியது என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நோய் தாக்கினால், காய்ச்சல், வாந்தி,குமட்டல், தலைவலி, உடல் வலி ஏற்படும் என அவர் கூறியுள்ளார்.

போதிய சிகிச்சையுடன் வீட்டில் ஓய்வெடுத்தால் நோயை தடுக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அவ்வப்போது புதிய புதிய வைரஸ்கள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்னும் முழுமையாக தளர்வுகள் வழங்கப்படவில்லை.

இருந்தபோதிலும் அவ்வப்போது கேரளாவில் நிபா வைரஸ், பறவைக் காய்ச்சல் போன்ற வைரஸ்களும் பரவுகின்றன.

மாநிலம் முழுவதும் நோரோ வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரங்கள் நடத்தப்படுவதாக கேரள சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது.

ஒருவேளை நோய் பாதித்துவிட்டால் தற்காப்பு நடவடிக்கைகளாலும், தகுந்த சிகிச்சையாலும் நோரோ வைரஸை குணப்படுத்தலாம் என கேரள அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

நோய் பாதித்தோருடன் நேரடி தொடர்பில் இருப்பதாலூம் இந்த நோய் பரவக்கூடிய வாய்ப்பிருப்பதால் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நோய் பரவாமல் இருக்க உணவு உண்பதற்கு முன்னதாக கைகளை சவர்காரத்தால் நன்கு கழுவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பிடும் உணவை நன்றாகச் சமைத்த பின்னர் உண்ண வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.