January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியர்கள் அனைவருக்கும் இலவச தடுப்பூசி – மத்திய அமைச்சர் அறிவிப்பு

இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கு பாரதிய ஜனதா கட்சி அரசாங்கம் தீர்மானித்துள்ளது என மத்திய இணை அமைச்சர் பிரதாப் சாரங்கி தெரிவித்துள்ளார்

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;

இந்தியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க உள்ளதை விரைவில் பிரதமர் நரேந்திரமோடி அறிவிப்பார்.நபர் ஒருவருக்கு கொரோனா மருந்தினை வழங்குவதற்காக தலா 500 ரூபாயினை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் இலவச கொரோனா தடுப்பூசி குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.முதலில் பீகார் தேர்தல் அறிக்கையில் பாஜக இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.அதனைத் தொடர்ந்து பல மாநிலங்கள் இந்த வாக்குறுதியை வழஙகியுள்ளன.