July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னையில் 5 கி.மீ வேகத்தில் தரைக் காற்று; வெளியே செல்ல வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று சென்னை அருகே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.

சென்னையை ஒட்டி காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலை கொண்டுள்ளதால் தரைக் காற்று வீசி வருகிறது.

அதிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது மணிக்கு 45 கி.மீ வேகத்தில் தரைக் காற்று வீசும் எனவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடப்பதன் காரணமாக இன்று (11) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் பலத்த தரைக் காற்று மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதேவேளை, 45 கி.மீ வேகத்தில் தரைக் காற்று வீசும் என்பதால் மக்கள் வெளியே செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நெருங்கி வரும் நிலையில், சென்னை பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையின் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்சமாக தாம்பரத்தில் 23 செ.மீ மழை பதிவாகியுள்ளது. சோழவரத்தில் 22 செ.மீ. மழை பெய்துள்ளதுடன், குறிப்பாக சென்னை முழுமையாக பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கியுள்ளதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.