January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விராட் கோலியின் மகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் கைது!

விராத் கோலியின் மகளுக்கு துஷ்பிரயோக அச்சுறுத்தல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபரை மும்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒரு மென்பொருள் பொறியியலாளர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் தோல்வையைத் தொடர்ந்து, கோலியின் மகளை துஷ்பிரயோகம் செய்வதாக சமூக ஊடக வழியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்த ஒருவர் என்றும் மும்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.