January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னையில் கனமழை: பல இடங்களில் வெள்ளம்!

சென்னை மாநகர் முழுவதும் பரவலாக 6 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாமல் பெய்யும் மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. சென்னையின் பல பகுதிகள் தீவு போல காட்சி அளிக்கிறது. தி நகர், ஆவடி, வேளச்சேரி, அடையாறு போன்ற பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

சென்னையில் இன்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு அருகே இன்று மாலை கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

தற்போது சென்னையிலிருந்து தென் கிழக்கில் 170 கீ.மீ தொலைவில் தாழ்வு மண்டலம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் மதுரை, திருச்சி மும்பை, ஷார்ஸஜா, துபாய் உட்பட 14 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .

அத்துடன் 6 பன்னாட்டு விமான நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.