July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சென்னையில் விடாது பெய்யும் மழை

சென்னையில் கன மழை, வெள்ளப் பெருக்கால் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் மீட்பு பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகிறது.சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், 37 மாவட்டங்களில் மழை பெய்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, கரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொத்தம் 169 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தற்போது, 48 நிவாரண முகாம்களில், 1,107 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை 8 ஆம் திகதி வரை 346.1 மி.மீ பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது 241.2 மி.மீட்டர் என்ற இயல்பான மழையளவை விட 43 வீதம் கூடுதல் ஆகும்‌ எனக் கூறப்படுகிறது.

மாநிலத்தின் சராசரி மழை அளவு 14.2 மி.மீட்டர் எனக் சொல்லப்படும் நிலையில், சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 67.08 மி.மீட்டர் பதிவாகியுள்ளது.