சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பார்வையிட்டுள்ளார்.
சென்னையை ஒட்டியுள்ள தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது, இந்த பகுதிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
தான் வழக்கமாக வரும் காரில் பயணிக்காமல், வேறுவாகனமொன்றில் வந்து வெள்ளம் சூழ்ந்த பகுதிகளுக்குள் சென்று, நீருக்குள் இறங்கி மக்களுடன் கலந்துரையாடினார்.
அதேநேரம், மழை வெள்ளத்தை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
#NorthEastMonsoon-ஐ எதிர்கொள்ள மொத்த அரசு நிர்வாகமும் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டேன்.
பொதுமக்கள் 1070 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு குறைகளைத் தெரிவியுங்கள். pic.twitter.com/rMkJoXsGWo
— M.K.Stalin (@mkstalin) November 7, 2021
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுகவினர் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என முதல்வர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கே.கே.நகர், கோடம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, கோயம்பேடு, எழும்பூர், அண்ணாநகர், நுங்கம்பாக்கம், அம்பத்தூர், செங்குன்றம் உள்பட பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை நீடிக்கிறது.