January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொடர் மழையால் சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை!

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு மீண்டும் சென்னைக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு அடுத்து வரும் மணித்தியாலங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால், தற்போது முக்கிய சாலைகள் எங்கும் வெள்ள நீர் நிரம்பி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் புறநகர் பகுதிகளிலும் இரவு முதல் மழை நீடித்து வருகிறது. அதிகாலை அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 16 சென்டி மீற்றர் மழை பதிவாகியுள்ளது.

மேலும் சென்னையில் உள்ள போக்குவரத்து சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து நீர் திறக்கபடுவதால் கரையோர மக்களையும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களையும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.