இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலம், அகமது நகரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் தீயில் சிக்கியும், மூச்சு திணறியும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேநேரம், 25 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை உயிரிழந்தவர்களின் கொவிட் நோயாளிகளும் உள்ளடங்குவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் பலி எண்ணிக்கை உயர்வடையக்கூடும் என அஞ்சப்படுகிறது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து மஹாராஷ்டிர மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக தலா 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணை தகவல்கள் தெரிவிக்கின்றன.
A fire broke out today at the #Covid ICU ward of the municipal hospital in the #Ahmednagar district of #Maharashtra, killing ten persons. pic.twitter.com/QqOkdoFRiy
— Backchod Indian (@IndianBackchod) November 6, 2021