இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
இன்றையதினம் உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாதில் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
கேதார்நாத் கோயில் அருகே 12 அடி உயரமும் 35 டன் எடையும் உடைய ஆதி சங்கரரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில் 2013 இல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது கேதார்நாத் கோயில் சேதம் அடைந்ததுடன் கோயில் அருகே இருந்த ஆதி சங்கரர் சிலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.
இதனையடுத்து கோயில் மற்றும் சமாதியை புனரமைக்கும் பணி 500 கோடி ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேதார்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி அங்கு சுவாமி தரிசனம் செய்ததுடன் வழிபாட்டுக்கு பின்னர் அங்கு மேற்கொள்ளப்படும் பணிகளை பார்வையிட்டார் பிரதமர்.
பின்னர் உத்தரகண்டின் கேதார்நாத் கோவில் அருகே 12 அடி உயர ஆதி சங்கரர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இதனையடுத்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியாவின் கலாச்சார பெருமையை உலகம் கண்டு வியக்கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மேலும், வாழ்நாளில் ஒரு முறையாவது கேதார்நாத் ஜோதிர்லிங்கத்தை தரிசிக்க வேண்டும், என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, ஆன்மீக யாத்திரை மூலமாக நமது கலாசாரங்களை தெரிந்து கொள்ள முடியும், எனவும் கடந்த 2013ஆம் ஆண்டு வெள்ள சேதத்திற்கு பிறகு கேதார்நாத் மீண்டும் சீரமைக்கப்படும் என்ற தன்னம்பிக்கை தன்னுள் இருந்ததாக பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் இருக்கும் முக்கிய யாத்திரை தலங்களில் ஒன்றான கேதார்நாத் யாத்திரை தலம் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது.
இந்திய கலாச்சாரத்தோடு இரண்டர பின்னிப்பிணைந்த கேதார்நாத் ஆலயம் இன்றும் மக்களால் போற்றி வணங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Speaking at Kedarnath. Watch. https://t.co/QtCLIbRZy7
— Narendra Modi (@narendramodi) November 5, 2021