
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு வீடு திரும்பினார்.
திடீர் உடல் நலக்குறைவால் கடந்த 28 ஆம் திகதி மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ராஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்த காவேரி மருத்துவமனை, நடிகர் ரஜினிகாந்துக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட கட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாகவும் அறிவித்திருந்தது.
இதனை தொடர்ந்து சிகிச்சையை முடித்துக்கொண்டு நேற்று இரவு அவர் வீடு திரும்பியுள்ளார்.
Returned home 🙏 https://t.co/35VeiRDj7b
— Rajinikanth (@rajinikanth) October 31, 2021