May 23, 2025 15:07:08

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஜினியின் உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை, காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்த்தின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28 ஆம் திகதி மாலை லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வழக்கமான பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் முன்னதாகத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பை நீக்குவதற்கான இரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

இதனையடுத்து இன்னும் சில நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ரஜினிகாந்த் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.