May 23, 2025 22:47:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘இந்தியா – இலங்கை இடையே புதிய ஆன்மீக உறவு உருவாகியுள்ளது’

இலங்கையின் அசோகவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் மற்றும் செடிகள் இந்தியாவின் அயோத்தி ராமர் கோயிலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் சென்ற குழு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தையும் சந்தித்து பேசியுள்ளனர்.

இந்தியாவிற்கான இலங்கை தூதர் மிலிந்த மொரகொட இலங்கையின் அசோகவனத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் மற்றும் செடிகளை அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவரிடம் ஒப்படைத்தார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

வரலாற்று தகவலின்படி இலங்கை மன்னன் இராவணன் அசோக வனத்தில் சீதையை சிறை வைத்து இருந்ததாக ராமாயண காவியத்தில் கூறப்பட்டிருக்கிறது.

ஆகவே அந்த அசோகவனத்தின் முக்கியம் கருதி அங்கிருந்து கல் மற்றும் செடிகளை அயோத்தி ராமர் கோவிலில் பயன்படுத்துவதற்காக இலங்கை அரசு அளித்து இருக்கிறது.

இந்தியாவில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் துணைத் தூதர் நிலுகா ஆகியோர் தங்கள் நாட்டு அரசின் சார்பில் அசோக வனத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கல்லை, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் சம்பக் ராயிடம் ஒப்படைத்தனர்.

பின்னர் ராமஜென்ம பூமியில் கட்டப்படும் கோயிலின் கட்டுமானப் பணிகளை இலங்கையின் உயர்ஸ்தானிகர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த ஆன்மீக பயணம் பற்றி பேசியுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இலங்கையின் அசோகவனத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட கல் அயோத்தி ராமர் கோவில் கட்ட வழங்கப்பட்டதன் மூலம் இந்தியா-இலங்கை இடையே புதிய ஆன்மீக உறவு உருவாகியுள்ளது என தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் சுற்றுலாத் துறை சார்பில் ராமாயண யாத்திரை தொடங்கப்பட்டுள்ளதாகவும் மிலிந்த மொரகொட கூறியுள்ளார்.

இந்த யாத்திரையில் இந்தியாவில் உள்ள அயோத்தி ராமர் கோவில் உட்பட முக்கிய புனிதத் தலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் இலங்கை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அயோத்தியிலிருந்து உத்தர பிரதேச தலைநகரான லக்னோ வந்த இலங்கை குழுவினர் அங்குள்ள அயோத்தியின் ராஜ வம்சத்தினரை சந்தித்துள்ளனர்.

இதன்போது அயோத்தியின் ராஜ வம்சத்தை சேர்ந்த விமலேந்திரா மோகன் மிஸ்ரா வீட்டில் இலங்கை குழுவினர் விருந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி ராமர் கோவில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திறகுள் கட்டி முடிக்கப்படும் என கூறப்படுகிறது.