January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ”திறமையான நடிகர் புனித் ராஜ்குமாரை விதியின் கொடூரமான முடிவு, நம்மிடமிருந்து பிரித்துச் சென்றுவிட்டது” என உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.

இது இறப்பதற்கான வயது அல்ல என குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி அவரது அயராத உழைப்பையும், அவரது அற்புதமான திறமையையும் ,வரும் தலைமுறைகள் முன்னுதாரணமாக கொள்ள வேண்டுமெனவும் பதிவிட்டுள்ளார்.

இதன்போது மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பிரதமர் டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் இன்று காலமானார்.

உடற்பயிற்சியின்போது ஏற்பட்ட மாரடைப்பால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் காலமானார்.

புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இந்தியத் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.