June 15, 2025 12:48:57

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது”: மருத்துவமனை அறிக்கை!

நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் நேற்று இரவு திடீரென அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அவரின் மனைவி லாதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

இந்நிலையில் இது தொடர்பில் மருத்துவமனை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி நடிகர் ரஜினிகாந்துக்கு மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்களில் ஏற்பட்ட கட்டிகள் அகற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை தெரிவித்திருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த சிகிச்சையை வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இன்னும் சில நாட்களில் நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.