கன்னட சூப்பர் ஸ்டாரான நடிகர் புனித் ராஜ்குமார் காலமானார்.
இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட நிலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சை பலனின்றி காலமாகியுள்ளார்.
இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
46 வயதான புனித் ராஜ்குமார், கன்னட திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தையும் இலட்சக்கணக்கான ரசிகர்களையும் கொண்டவர்.
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கூறப்படும் புனித் ராஜ்குமார், அப்பு, ஜாக்கி, வம்சி, ராம் உள்ளிட்ட வெற்றிப் படங்கள் பலவற்றில் நடித்துள்ளார்.
இவர் பாரம்பரியமான சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை ராஜ்குமார் பிரபல கன்னட நடிகர். அத்துடன் இவரின் அண்ணன் சிவ ராஜ்குமார் கன்னட உலகின் இன்னொரு பிரபல நடிகராக இருக்கின்றார்.
புனித் ராஜ்குமாரின் மரணத்தை அறிந்து அவரின் ரசிகர்கள் வைத்தியசாலைக்கு முன்னால் கூடி கதரி அழுவதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அத்துடன் பெங்களூரில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதுடன், திரையரங்குகளை உடனடியாக மூடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.