சென்னை காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனாலும் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால்தான் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில நாட்களுக்கு முன்பு தலைநகர் டெல்லியில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுக் கொண்டார்.
அவர் நேற்று சென்னை வந்த நிலையில், இன்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.