இந்தியாவில் ‘AY4.2’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது .
உருமாறிய இந்த கொரோனா வைரஸ் கர்நாடகா மாநிலத்தில் இரண்டு நபர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார துறை கூறியுள்ளது.
இதனால் மக்கள் விழிப்புணர்வுடன் வெளியில் நடமாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் தற்போது முழு தளர்வு அளிக்கப்பட்டு பாடசாலைகள், கல்லூரிகள் முழு நேரமும் இயங்கி வருகிறது.
அதேபோல், பொது நிறுவனங்கள், திரையரங்குகள், மோல்கள் என அனைத்திலும் 100 வீத மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
மக்கள் வெளியில் அதிகமாக நடமாடி வருவதால் இந்த ‘AY4.2’ கொரோனா வைரஸ் மேலும் பரவ அதிகம் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
சீனா, ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் டெல்டா 4 வைரஸின் உருமாறிய வளர்ச்சியான ‘AY4.2’ கொரோனா வைரஸ் மூன்றாவது அலை பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது
இந்நிலையில் இந்த ‘AY4.2’ கொரோனா வைரஸ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இரண்டு பேருக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த நபர்கள் வசித்த பகுதி மற்றும் உறவினர்கள் என அனைத்து தரப்பிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியாவிலும் உரு மாற்றம் அடைந்த ‘AY4.2’ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அலட்சியத்தோடு இருக்காமல், முறையாக சமூக இடைவெளியை கடைபிடித்து மூன்றாம் அலையை தடுக்க உதவுமாறு மருத்துவர்கள் மக்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.