February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முடி திருத்தும் நபருடன் தமிழில் உரையாடிய இந்திய பிரதமர்

இந்திய பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் முடி திருத்தும் நபருடன் தமிழில் உரையாடியுள்ளார்.

இந்திய மக்களுடன் மாதத்தின் கடைசி ஞாயிறுக்கிழமை உரையாற்றும் மான் கி பாரத் நிகழ்ச்சியின் போதே மோடி தூத்துக்குடியில் வசிக்கும் பொன் மாரியப்பன் என்பவருடன் உரையாற்றியுள்ளார்.

இன்று இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய பிரதமர், தூத்துக்குடியில் முடி திருத்தும் நிலையத்தை அமைத்துள்ள பொன் மாரியப்பன் அங்கே ஒரு நூலகத்தை அமைத்துள்ளார் என  தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மாரியப்பனிடம் மோடி தமிழில் உரையாடினார்.

“வணக்கம் நலமாயிருக்கிறீர்களா? என மோடி மாரியப்பனிடம் நலம் விசாரித்தார்.  “நூலகம் நடத்தும் யோசனை எப்படி வந்தது?, உங்களுக்கு என்ன நூல் பிடிக்கும்” என்றும்  மோடி தமிழில் கேட்டார். அதற்கு பொன் மாரியப்பன் பதில் அளித்தார்.