May 31, 2025 2:57:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

செளந்தர்யா ரஜினிகாந்தின் ‘Hoote’ செயலியை தொடக்கி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்

செளந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியை தொடக்கி வைத்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

இதன்போது, தனது அப்பாவுக்கு தமிழ் எழுத வராது என சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

என் அப்பாவுக்கு தமிழ் நன்றாக படிக்க தெரியும். ஆனால் எழுதத் தெரியாது. அப்பாவிடம் கலந்து ஆலோசித்த பிறகு தான் இதை வெளியிட்டுள்ளதாக சௌந்தர்யா கூறியுள்ளார்.

முன்பு அவர் கட்சி தொடங்குவது சார்ந்த ட்வீட் போடுவதற்கு எனக்கு வோய்ஸ் நோட் அனுப்புவார்.அவ்வேளையில் பிறந்த யோசனை தான் Hoote செயலி என சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

அவருக்கு தமிழ் எழுதத் தெரியாது என்பதால் அவர் மீது தமிழ்நாடு மக்கள் வைத்துள்ள அன்பு குறையப் போவது இல்லை எனவும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.