January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது; நடிகர் விஜய்

இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் என்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது என நடிகர் விஜய் தெரிவித்திருக்கிறார்.

கஷ்டப்பட்ட உழைப்பில் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்திருப்பது தேவையற்றது.நுழைவு வரி செலுத்துவதில்லை, வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவது தேவையற்ற கருத்துகள் என விஜய் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

என்னை தேச விரோதியாக கூறுவது தவறு,என் வழக்கு மட்டும் அல்லாமல் நடிகர்கள் தனுஷ், சூர்யா வழக்கிலும் பொதுப்படையாக கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது என நடிகர் விஜய் தரப்பு வாதம் முன்வைத்துள்ளது.

இன்று விசாரணைக்கு வந்த நடிகர் விஜயின் இறக்குமதி காருக்கான வரி தொடர்பான நீதிபதியின் கருத்துக்களை நீக்கக் கோரும் வழக்கு விசாரணையில் விஜய் தரப்பினர் தமது காரசார விவாதங்களை முன் வைத்துள்ளனர்.

இதில் தனி நீதிபதி முன்வைத்த கருத்துக்கள் தன்னை புண்படுத்தியதாக நடிகர் விஜய் நீதிமன்றத்தில் தனது தரப்பினர் ஊடாக தெரிவித்திருக்கிறார்.

இறக்குமதி காருக்கான வரி தொடர்பான நீதிபதியின் கருத்துகளை நீக்கக் கோரும் விஜய் வழக்கின் தீர்ப்பு திகதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.