சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீரென அரசுப் பேருந்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
அதேநேரம், இலவச பேருந்து சேவை எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது என பயணிகளிடம் அவர் கேட்டறிந்தார்.
தமிழக முதலமைச்சர் திடீரென அரசு பேருந்தில் ஏறி ஆய்வு செய்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசால் தற்போது பேருந்துகளில் பயணிக்கும் மகளிருக்கு இலவச சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பேருந்துகளில், மகளிருக்கான இலவச சலுகைகள் எந்தளவுக்கு பயன்படுத்தப்படுகிறது, போக்குவரத்து இலகுவானதாக இருக்கிறதா என சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்த முதலமைச்சர் பேருந்தில் ஏறி ஆய்வு செய்துள்ளார்.
பேருந்தில் ஏறிய முதலமைச்சர் அங்கு பயணிகளிடம் பேருந்து சேவை குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து முதலமைச்சரை கண்டதும் மக்கள் கூட்டம் அங்கு கூடியதால் சற்று நேரம் பரபரப்பானது.