July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவ தளபாட ஏற்றுமதியில் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியா!

இராணுவ தளபாடங்கள் ஏற்றுமதி செய்யும் 25 முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், இராணுவ தளபாட ஏற்றுமதி என்பது நமது பாதுகாப்பு திறன் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வளர்ந்த நாடுகள் மட்டுமே இராணுவ தளபாட ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த நிலையில், இந்தியாவும் அதில் தற்போது சேர்ந்து உள்ளது என பெருமைப்பட தெரிவித்துள்ளார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்டாக்ஹோம் மையத்தின் பட்டியலில் இந்தியா முதல் முறையாக இடம்பெற்றுள்ளமை, மிகவும் மகிழ்ச்சியான விஷயம் முன்னணி நாடுகள் பட்டியலில் இந்தியா இணைந்திருப்பது சர்வதேச தரத்துக்கு இணையான பொருட்களை தயாரிக்கும் திறனை இந்தியா பெற்றுள்ளது என்பதைக் காட்டுவதாகும் என பாதுகாப்பு துறை அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், இந்தியாவில் இராணுவ தளபாட ஏற்றுமதியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

விமானப்படை பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி மூலம் ரூ.35 ஆயிரம் கோடி ஏற்றுமதி செய்ய 2024-25 ஆம் ஆண்டுக்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.