இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமானது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பிரதமர் மோடி மக்களிடையே உரையாற்றினார்.
இதன்போது, பொது மக்களிடம் ஒத்துழைப்பு இருந்ததாலே இந்த சாதனை சாத்தியமானது 257 நாட்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா கடினமான இலக்கை எட்டியுள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
100 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்ட சாதனையானது நாட்டு மக்கள் 130 கோடி பேரையும் சேரும் என பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கொரோனா குறித்த அனைத்து கேள்விகளுக்கும் இந்த சாதனை பதிலளித்துள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசி செலுத்துவதில் எந்த விஐபிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கவில்லை, விஐபி கலாச்சாரத்தை ஒழித்துள்ளோம், கடைக்கோடி மக்களுக்கும் தடுப்பூசி செல்வதை உறுதி செய்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் முழுக்க முழுக்க அறிவியல்பூர்வமானது அறிவியல் முறைப்படி செயல்பட்டு மக்களுக்கு தடுப்பூசியைக் கொண்டு சென்றோம்.
தடுப்பூசி சாதனையின் மூலம் இந்தியா மீதான விமர்சனங்கள் முறியடிக்கப்பட்டு உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.