February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்தியாவின் உத்தராகண்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 46 பேர் மரணம்

இந்தியாவின் வடபகுதி மாநிலமான உத்தராகண்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 46 பேர் உயிரிழந்துள்ளனர்.

உத்தரகாண்ட மாநிலத்தில் ஒரே நாளில் 192.7 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியமையே வெள்ள அனர்த்தம் ஏற்படுவதற்கு காரணம் என தெரியவருகிறது.

மழையுடன் கூடிய காலநிலையால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தால் பாலங்கள், வீடுகள் மற்றும் பாதைகள் நீரில் மூழ்கி, சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, தற்போது வரை 300 க்கு அதிகமானவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி நிலேஷ் பார்னே தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தால் உயிரிழந்தவர்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இவ்வாரம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் 26 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.